டிசம்பரில் 'டாப் கியரில்' கார் விற்பனை!

குறிப்பாக மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன தயாரிப்புகள் விற்பனையில் சாதனை அளவை எட்டியுள்ளன.
டிசம்பரில் மட்டும் மாருதி 99225 கார்களை விற்றுள்ளது. இது 2009-ம் ஆண்டை விட 17 சதவீத வளர்ச்சி ஆகும். குறிப்பாக ஆல்டோ விற்பனை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் கார் விற்பனையில் கடந்த ஆண்டை விட 172 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
அதேபோல ஹோண்டா நிறுவனம் தனது சீல் ரக கார் விற்பனையில் 20 சதவீத உயர்வு கண்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இதன் விற்னை 17 சதவீதம் அதிகரித்துள்ளது டிசம்பரில்.
ஜிஎம், வோக்ஸ்வேகன் போன்ற நிறுவனங்களின் கார் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது, அந்த நிறுவனங்களின் விரிவாக்க யோசனையை விரைவுபடுத்தியுள்ளன.
இதில் எதிர்பாராத வீவ்ச்சியைக் கண்டுள்ளது டாடாவின் நானோ மட்டுமே. தொடர்ச்சியான தீவிபத்து காரணமாக இந்த காரை வாங்க தயக்கம் காட்டுகின்றனர் வாடிக்கையாளர்கள். ஆனால் இதே நிறுவனத்தின் இதர பிராண்டுகள் நல்ல விற்பனையை எட்டியுள்ளன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த டிசம்பரில் 28 சதவீத அதிக விற்பனை கண்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.


Click it and Unblock the Notifications








