நம்பர் பிளேட்டில் 'இசட்' இருந்தால் ஆபத்து?-ஆய்வில் தகவல்

புது வாகனங்கள் வாங்கி பதிவு செய்யும்போது, அதன் பதிவு எண்களின் கூட்டு்த்தொகை எட்டு வரக்கூடாது என நம்மில் பலர் வேண்டிகொண்ட காலம் உண்டு. கூட்டுத்தொகை எட்டு கொண்ட வாகனங்கள் ராசியிருக்காது, விபத்துக்களில் சிக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது.
இதனாலேயே, கூட்டுத்தொகை எட்டு வரும் எண்களை, வாகனங்களுக்கு பதிவு எண்களாக வழங்கவேண்டாம் என அரசாங்கமே உத்தரவிட்டு நிறுத்திவிட்டது. இதேபோன்று, ஆங்கில எழுத்து இசட் கொண்ட எண்கள் அதிக விபத்துக்களில் சிக்கியுள்ளதாக, சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த எலிபண்ட்.கோ.யூகே என்ற விபத்து காப்பீட்டு நிறுவனம், விபத்துக்குள்ளாகி இழப்பீடு வழங்கப்பட்ட மொத்தம் 6,43.939 வாகனங்களின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தியது. இதில், விபத்துக்குள்ளான வாகனங்களில் பெரும்பாலான வாகனங்களின் பதிவு எண் வரிசையில் இசட் எழுத்து இருந்தது தெரிந்தது.
இதில், வேடிக்கை என்னவென்றால், இசட் எழுத்து கொண்ட வாகனங்களின் டிரைவர்கள் சரியாக ஓட்டினாலும், அது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இசட் வரிசை கொண்ட பதிவு எண்களில் என்சிஇசட்(NCZ)வரிசை பதிவு எண் கொண்ட வாகனங்கள் அதி்க விபத்துக்களை சந்தித்துள்ளது.
இதுகுறித்து எலிபண்ட்.கோ.யூகே காப்பீட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பிரையன் மார்ட்டின் கூறுகையில், "புள்ளிவிபர அறிக்கை சற்று அதிர்ச்சி தருவதாக இருப்பினும், விபத்துக்கள் எதிர்பாராமல் நிகழ்கின்றன மறுக்க முடியாது. எனவே, இசட் எழுத்தை பதிவு எண்ணாக கொண்ட வாகனங்களுக்கு கூடுதல் பிரிமியம் தொகை வசூலி்க்கும் எண்ணம் எதுவும் இல்லை,"என்றார்.
வாகன பதிவு எண்களில் ஆங்கில எழுத்து இசட் இருந்தாலும், எந்த எழுத்து இருந்தாலும், நாம் முன்ஜாக்கிரதையுடன் செயல்பட்டால், முடிந்தளவு விபத்துக்களை கண்டிப்பாக தவிர்க்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications








