உற்பத்தி செலவு அதிகரிப்பு: சென்னை ஆலையை மூட கேஸ்ட்ரால் முடிவு

கடந்த சில மாதங்களாகவே பேஸ் ஆயில் தயாரிப்புக்கான உற்பத்தி செலவீனம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தொடர்ந்து ஆலையை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேஸ்ட்ரால் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"நாட்டில் உள்ள கேஸ்ட்ரால் ஆயில் தொழிற்சாலைகளில் சென்னை ஆலை மிகப்பழமையானது. இந்த தொழிற்சாலையில் பேஸ் ஆயில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக பேஸ் ஆயில் தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.
இதனால், சென்னை ஆலையை தொடர்ந்து நடத்த இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே, வரும் 31ந் தேதி முதல் ஆலையில் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படுகிறது. மேலும், அங்கு வேலைபார்த்து வரும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








