சியட் டயர் விலை 2.5% வரை அதிகரிப்பு

வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் சியட் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அனைத்து ரக வாகனங்களுக்கும் அந்த நிறுவனம் டயர்களை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியிலிருந்து டயர் தயாரிப்புக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான இயற்கை ரப்பரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், டயர் தயாரிப்புக்கான உற்பத்தி செலவீனம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால், உற்பத்தி செலவீனத்தை சமாளிக்கும் விதத்தில், டயர் விலையை சியட் அடிக்கடி உயர்த்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் முதல் தனது அனைத்து ரக டயர்களின் விலையையும் 2 முதல் 2.5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக சியட் தெரிவித்துள்ளது.
இயற்கை ரப்பர் உள்ளிட்ட அனைத்து முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வால் டயர் விலையை உயர்த்தியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு மூலம் நடப்பு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் உயரும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








