ஜெனரல் மோட்டார்சின் கேமரோ ஸ்போர்ட்ஸ் கார்: இந்தியாவில் அறிமுகம்

கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.கார் விற்பனையில் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்திய சந்தையிலும் ஜெனரல் மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும்,போட்டியை சமாளிக்கவும் ஜெனரல் மோட்டார்ஸ் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் செவரோலெட் கேமரோ என்ற ஸ்போர்ட்ஸ் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
ஃபெராரி,மசேரட்டி,கோயினிக்ஸெக் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் நுழைந்துவிட்டன.இந்நிலையில் உலகின் மிகக்குறைந்த விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் கூறியதாவது:
"ஸ்போர்ட்ஸ் கார் விரும்பிகளின் மனதை கவரும் வகையில்,புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கதவுகள் கொண்ட இந்த கார் ரைட்ஹேண்ட் டிரைவிங் கொண்டது.இந்த காரை ஓட்டும்போது பரவசமான புதிய அனுபவத்தை பெறமுடியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
செவரோலெட் கேமரோ விரைவில் இந்தியாவி்ல் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.ஆனால், அறிமுகம் செய்யும் தேதி மற்றும் விலை குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.இந்திய ஸ்போர்ட்ல் கார் ரசிகர்களின் மனதில் இந்த கார் நிச்சயம் இடம் பிடிக்கும்," என்று கூறினார்.
அமெரிக்காவில் கேமரோ ஸ்போர்ட்ஸ் கார் ரூ.9.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.18.4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், இதன் விலை ரூ.30 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








