இன்று நூற்றாண்டு பிறந்தநாள் காணும் செவர்லே கார் பிராண்டு

Chevrolet Birthday
செவி என்று வாடிக்கையாளர்களாலும், ஆட்டோத்துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் செவர்லே பிராண்டு இன்று தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டு அமெரிக்கா மட்டுமில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமான கார் பிராண்டாக திகழ்கிறது.

இந்த நிலையில், செவர்லே பிராண்டு துவங்கப்பட்டு நூறாண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் ஜிஎம் பல்வேறு விழாக்களை நடத்துகிறது.

அமெரிக்கா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள டீலர்களில் செவர்லே நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடப்படுகின்றன.

நூறாண்டுகளை கடந்து மார்க்கெட்டில் வெற்றிகரமான பிராண்டாக வலம் வரும் செவர்லே பற்றிய தகவல்களை காணலாம்.

கார் பந்தய வீரரான லூயிஸ் செவர்லே, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனர் பில்லி துரந்துடன் இணைந்து கடந்த 1911ம் ஆண்டு நவம்பர் 3ந் தேதி செவர்லே பிராண்டு துவங்கினார்.

செவர்லே பிராண்டில் வந்த முதல் கார் சி கிளாசிக் சிக்ஸ்.

நம்பர்-1 கார் உற்பத்தியாளராக திகழ்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் கோட்டையை தகர்த்த பெருமை செவர்லேயை சாரும்.

கடந்த 1928ம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக செவர்லே கார்கள் அடியெடுத்து வைத்தன.

கடந்த 1918ம் ஆண்டு செவர்லே பிராண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.

ஃபோர்டு மற்றும் கிரிஸ்லர் போன்று அமெரிக்காவின் மலிவு விலை கார் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக செவர்லே மாறியது.

கடந்த 1950ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கோர்வெட்டே ஸ்போர்ட்ஸ் கார் மூலம் செவர்லே கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற துவங்கியது.

மேலும், இப்போதும் செவர்லே கோர்வேட்டே கார்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் காராக திகழ்கிறது. விரைவில் மேம்படுத்தப்பட்ட கோர்வெட்டே கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது,.

கடந்த 1966ம் ஆண்டு செவர்லே அறிமுகம் செய்த கேமரோ கார் ஃபோர்டு முஸ்டாங் காருக்கு பெரும் போட்டியாக மாறியது.

ஜெனரல் மோட்டார்ஸ் கீழ் இயங்கும் கார் பிராண்டுகளில் அதிக கார்களை விற்பனை செய்யும் பிராண்டாக செவர்லே திகழ்கிறது.

உலகின் நான்காவது பெரிய கார் பிராண்டாக திகழும் செவர்லே உலகின் 140 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.

கடந்த 2010ம் ஆண்டில் உலக அளவில் 42.6 லட்சம் வாகனங்களை விற்றதால், சராசரியாக 7.4 வினாடிகளுக்கு ஒரு காரை விற்கும் பிராண்டாக செவர்லே மாறியது.

கடந்த 2003ம் ஆண்டு செவர்லே பிராண்டு இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தது. இதுவரை இந்தியாவில் 5 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது செவர்லே.

இந்தியாவில் ஸ்பார்க், பீட், ஏவியோ, யுவா, தவேரா, குரூஸ் மற்றும் கேப்டிவா உள்ளிட்ட கார் மாடல்களை செவர்லே விற்பனை செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2011, 13:56 [IST]
English summary
Chevrolet, the inimitable American car brand is now a hundred years old. Chevrolet is celebrating its 100th Birthday today. Oneindia joins the celebrations by listing out a few interesting facts about the American car brand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+