பிறந்தநாளில் 1 மில்லியன் குரூஸ் கார்களை விற்ற செவர்லே

ஜெனரல் மோட்டார்ஸ் கீழ் இயங்கும் செவர்லே கார் பிராண்டு இந்தியா உள்ளிட்ட 140 நாடுகளில் கார் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டுகளில் செவர்லேயும் ஒன்று.
இந்த நிலையில், அந்த நிறுவனம் அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் குரூஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட குரூஸ் பிரிமியம் செடான் கார் அமெரிக்காவில் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க சந்தையில் மட்டும் 10 லட்சம் குரூஸ் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து செவர்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர் கார்ல் ஸ்லிம் கூறுகையில்,"நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடும் செவர்லேக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறோம்.
தரம், மைலேஜ், பாதுகாப்பு, வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் நிறைவான காராக குரூஸ் இருப்பதால்தான் இத்தகைய விற்பனையை எட்ட முடிந்தது. செவர்லேக்கு இதைவிட சிறப்பான பிறந்தநாளை என்னால் எதிர்பார்க்க முடியவில்லை," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








