செவர்லே தவேரா காருக்கு எஞ்சின் சப்ளை செய்யும் சோனாலிகா

Chevrolet Tavera
டெல்லி: செவர்லே தவேரா காருக்கு பாரத் ஸ்டேஜ்- 4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்ட எஞ்சின்களை சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டில் வெளிவரும் தவேரா எம்யூவீ கார், பாரத் ஸ்டேஜ்-3 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்டப்பட்ட எஞ்சினுடன் வருகிறது..

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் கடந்த ஆண்டு பாரத் ஸ்டேஜ்- 4 விதிகள் அமல்படுத்தப்பட்டதால், மாநரங்களில் தவேரா விற்பனையை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுத்தியது.

இருப்பினும், கிராக்கியை கருத்தில்கொண்டு பாரத் ஸ்டேஜ்-4 எஞ்சினுடன் தவேராவை களமிறக்க ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இதற்காக, டிராக்டர் தயாரிப்பில் புகழ்பெற்ற இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் குழுமத்தில் ஓர் அங்கமான சோனாலிகா நிறுவனத்துடன் ஜெனரல் மோட்டார்ஸ் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதுகுறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தீபக் மிட்டல் கூறியதாவது:

"தவேரா கார்களுக்கு பாரத் ஸ்டேஜ்-4 எஞ்சினை சப்ளை செய்வதற்கு சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம்.

காமன் ரெ.யில் டைரக்ட் பியூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சின்கள் ஹோஷியார்பூரில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்..

மூன்று மாதஙகளில் எஞ்சின் சபளையை துவங்க இருக்கிறோம்.

மாத்திற்கு 1,500 எ:ஞ்சின்களை சப்ளை செய்யப்படும்," என்றார்.

Most Read Articles
English summary
Sonalika Tractors to supply BS-IV engines to GM India It has been reported that the tractor manufacturer Sonalika Group will supply Bharat Stage (BS)-IV compliant Common Rail Direct Fuel Injection (CRDFI) engines to General Motors (GM) India for its multi-purpose vehicle, Tavera.
Story first published: Friday, July 1, 2011, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X