இயற்கை எரிவாயுவில் இயங்கும் வால்வோ பஸ்: சோதனைகள் தீவிரம்

Volvo Bus
டெல்லி: இயற்கை எரிவாயுவில்(சிஎன்ஜி)இயங்கும் பஸ்களை அறிமுகப்படுத்த உள்ளதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சொகுசு பஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக வால்வோ திகழ்கிறது. டீசலில் இயங்கும் பஸ்களை தயாரித்து வரும் இந்நிறுவனம்,முதன்முறையாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை தயாரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில்,இந்த பஸ்களை அறிமுகப்படுத்த இருப்பதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வால்வோ நிறுவன தலைவர் கூறியதாவது:

சிஎன்ஜி பஸ்களுக்கான இறுதிகட்ட சோதனைகள் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.வரும் ஜுலை-செப்டம்பர் மாதங்களுக்கு இடையிலான காலாண்டில் இந்த பஸ்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டெல்லி மற்றும் மும்பையில் 8,400 பஸ்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டீசலில் இயங்கும் பஸ்களை விட, சிஎன்ஜி பஸ்களின் விலை 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும்.இதுதவிர,பேட்டரி மற்றும் டீசலில் இயங்கும், இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட பஸ்களை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது. இந்த பஸ்கள் மூலம் 40 சதவீதம் வரை எரிபொருள் செலவீனத்தை மிச்சப்படுத்தலாம்.

மேலும், பஸ் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், சீனா,மெக்சிகோ,ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக வால்வோ பஸ்களின் முக்கிய சந்தையாகவும், பஸ்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும்,என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 19, 2011, 13:20 [IST]
English summary
Volvo,informed its roll out of 8400 CNG version city buses during the third quarter of this year, preferably in Delhi and Mumbai in the first phase. Currently the buses are on field trial in Delhi.The price of this buses may rise by 15-20% than the existing diesel models.The company is gearing for introducing the hybrid version too with the coupled mode of electricity and diesel fuels, to reduce the fuel cost by 40%, says volvo president.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+