இந்திய,மத்திய கிழக்கு டிரக் சந்தையை பிடிக்க டெய்ம்லர் தீவீரம்

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் ஏஜி நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டு பெயரில் கனரக வாகனங்களை தயாரித்து வருகிறது. உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளில் கால் பதித்துள்ள டெய்ம்லர் ஏஜி நிறுவனம், தற்போது இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் டிரக் சந்தையை பிடிக்கும் முயற்சிகளில் தீவீரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக, அபுதாபியை சேர்ந்த ஆபர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது டெய்ம்லர். இதன்மூலம், அபுதாபியில் பஸ் மற்றும் டிரக்குகளை தயாரிக்க டெய்ம்லருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதேபோன்று, கனரக வாகன தயாரிப்பில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அல்ஜீரியா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து டெய்ம்லர் ஏஜி நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியதாவது:
"அபுதாபி,அல்ஜீரியாவை தொடர்ந்து, வட ஆப்பிரிக்க சந்தையிலும், கால் பதிக்க திட்டமிட்டுள்ளோம். டெய்ம்லர் நிறுவனத்தின் டிரக்குகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோன்று, அடுத்த ஆண்டு முதல் பாரத்பென்ஸ் பெயரில் இந்தியாவில் டிரக்குகளை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதற்காக, சென்னை அருகே பிரம்மாண்ட தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அடுத்த ஆண்டு செயல்பட துவங்கும். டாடா மோட்டார்ஸ் துணையுடன் இங்கு 6 டன் முதல் 49 டன் இழுவைதிறன் கொண்ட டிரக்குகள் தயாரிக்கப்படும். மேலும், சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டிரக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








