போலோவை ஆடி கார் போன்று மாற்றும் எல்இடி ஹெட்லைட்டுகள்

இந்த நிலையில், ஆடி காரில் பொருத்தப்படும் பகல் நேர ரன்னிங் விளக்குகள் போன்று வோக்ஸ்வேகன் போலோவுக்கு பகல் நேர ரன்னிங் விளக்குகளை டெக்டேன் என்ற ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஹெட்லைட் செட்டுகள் ஏற்கனவே ஆஸ்திரியாவில் விற்பனை செய்யப்படும் போலோ கார்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அங்கு வாடிக்கையாளர் மத்தியி்ல பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெக்டேன் நிறுவனம் தனியாக இந்த புதிய ஹெட்லைட்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய ஹெட்லைட்டுகள் போலோவுக்கு படு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கின்றன. இந்த ஹெட்லைட்டுகள் ஆடி ஆர்-8 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்ப அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு எல்இடி ஹெட்லைட் செட்டுகள் ரூ.17,000 விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட்டுகளை டெக்டேன் வெப்சைட்டில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஹெட்லைட்டுகள் விலையுடன் வரி மற்றும் ஷிப்பிங் கட்டணத்தை செலுத்தினால் போலோ காருக்கு புதிய ஹெட்லைட் செட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதுதவிர, டேஞ்சர் விளக்குகள், நம்பர் பிளேட்டுக்கான எல்இடி விளக்குகளையும் போலோ காருக்கு டெக்டேன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








