2012 டெல்லி ஆட்டோ கண்காட்சி: அட்டவணை,கட்டண விபரங்கள்

2012 Delhi Auto Expo
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 11வது டெல்லி ஆட்டோ கண்காட்சி வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ந் தேதி முதல் 11ந் தேதி வரை டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் நடக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியாக கருதப்படும் டெல்லி ஆட்டோ கண்காட்சி ஆட்டோத்துறையினர் மத்தியிலும, வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் ஆவலைத்தூண்டியுள்ளது.

அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன. மேலும், பல புதிய கார் மாடல்களும், இருசக்கர வாகனங்களும் இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சிக்கான அட்டவணை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ந் தேதி முதல் 11 ந்தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில், 5ந் தேதி மற்றும் 6ந் தேதி ஆகிய முதல் இரண்டு நாட்கள் பதிவு செய்த ஊடகங்களை சேர்ந்தவர்களும், ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

வரும் ஜனவரி 7ந் தேதி முதல் பொது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கான அனுமதி கட்டண விபரங்கள்:

சீசனல் டிக்கெட்: ரூ.1,500(நபர் ஒருவருக்கு)

வார நாட்கள்:

பிரிமியம் நேரம்(காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை):ரூ.500 (நபர் ஒருவருக்கு)

சாதாரண நேரம்(பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை): ரூ.150 (நபர் ஒருவருக்கு)

வார இறுதி நாட்கள்:

டிக்கெட் கட்டணம்: ரூ.200 (நபர் ஒருவருக்கு)

More from DriveSpark

Article Published On: Friday, November 18, 2011, 15:16 [IST]
English summary
Auto Expo 2012 is schedules from 5th January 2012 to 11 January 2012 in New Delhi India. Now we are going to give a full detail about this Auto Expo. Here you can read about Venue, Schedule and Ticket Price.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+