டீசல் கார்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி:டெல்லி அரசு அதிரடி

Diesel Car Engine
டெல்லி: 2011-12 ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது டெல்லி அரசு. இதனால், டெல்லியில் டீசல் கார்களின் விலை கணிசமாக உயருகிறது.

சுற்றுச்சூழலுக்கு டீசல் கார்கள் அதிக தீங்கு விளைவிப்பதாக கூறி டெல்லி அரசு இந்த அதிரடி வரி உயர்வை அறிவித்துள்ளது. இந்திய கார் விற்பனையில் தலைநகர் டெல்லி முக்கிய இடம்பிடித்துள்ளது.

டெல்லி உள்ளடக்கிய வடமத்திய பிரதேசத்தில் ஆண்டுக்கு 15 சதவீதம் அளவுக்கு புதிய கார் விற்பனை நடக்கிறது. இதில், 30 சதவீத இடத்தை டீசல் கார்கள் பிடித்துள்ளன. இந்நிலையில், டெல்லி அரசின் அதிரடி அறிவிப்பு டீசல் கார்களின் விற்பனையை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி அரசின் தடாலடி அறிவிப்புக்கு இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு(எஸ்.ஐ.ஏ.எம்.,) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு டீசல் கார்கள் மாசு ஏற்படுத்தும் என்ற டெல்லி அரசின் விளக்கத்தை ஏற்க முடியாததாக உள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளன.

ஆனால், சிஎன்ஜி மாடல்களைவிட டீசலில் இயங்கும் கார்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசுப்படுத்துவதாக டெல்லி அரசு விளக்கம் கூறியுள்ளது. வரி உயர்வால் மாருதி ஸ்விப்ட், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் டாடா இண்டிகா டீசல் மாடல்களின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 25, 2011, 11:40 [IST]
English summary
The recent budget presented by the Delhi administration is not conducive to the automobile industry with diesel cars getting additional burden of money.
 Diesel car will be one along with tobacco products, furnishings, sweetmeats, and suitings to cost more.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+