கடந்த மாதம் டிரக் விற்பனை 10.5 % உயர்வு

Truck
டெல்லி: கடந்த மாதத்தில் கார் விற்பனை மந்தமடைந்த நிலையில், பல்வேறு இடையூறுகளை கடந்து டிரக் விற்பனை 10.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆணடு ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் டிரக் விற்பனையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி எதிர்பார்த்தபடி அமையவில்லை.

பைனான்ஸ் நிறுவனங்கள் வட்டியை உயர்த்தியதாலும், தொடர்ந்து எகிறி வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை மந்தமாக உள்ளது.

ஆனால், இவற்றையும் தாண்டி டிரக் விற்பனை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்கிறது. கடந்த மாதம் டிரக் விற்பனை 10.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதில், அதிகபட்சமாக 5 முதல் 7.5 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட இலகு ரக டிரக் விற்பனை 25.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்து, 8 முதல் 12 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட டிரக் விற்பனை 19.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மல்டி ஆக்சில் டிரக் பிரிவு (25.2 முதல் 31 டன் வரை) கடந்த மாதம் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இந்திய போக்குவரத்து மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் (ஐஎப்டிஆர்டி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 10, 2011, 10:45 [IST]
English summary
The Indian Foundation of Transport Research and Training (IFTRT) has said that the perceived manufacturing slowdown and increase in financing costs have outwardly not deterred truck sales, which have grown by 10.5 per cent. Moreover, the IFTRT's monthly report has said that the segment to have revealed the highest growth of 25.8 per cent was light commercial vehicles (5-7.5 tonnes) with intermediate 8-12 tonne vehicles growing by 19.4 per cent. Multi-axle vehicles of 25.2-31 tonnes range have posted the lower increase of five per cent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+