டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்

ஆம், புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த வல்லுனர்கள் கம்ப்யூட்டர் மூலம் டிரைவிங் செய்பவ்ர்களின் திறனை பரிசோதித்து லைசென்ஸ் வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோ பிரிகுயன்ஸி ஐடன்டிகேசன்(ஆர்எப்ஐடி) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம் சென்சார்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் இருக்கும் டெஸ்ட் டிராக்குகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்படும்.
இந்த சென்சார்கள் ஆர்டிஓ அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர் டெஸ்ட் டிராக்கில் வாகனத்தை ஓட்டும்போது, அதை சென்சார்கள் பதிவு செய்து கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும்.
விதிமுறைகளுக்குட்பட்டு அவர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கண்டுபிடித்து லைசென்ஸ் வழங்கலாமா வேண்டாமா என்பதை கம்ப்யூட்டரே கூறிவிடும்.
ஆந்திர மாநிலத்திலுள்ள நாகோல், உப்பல், கொந்தாப்பூர், மேட்சல் ஆகிய நகரங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலங்களில் இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கில் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செகந்தரபாத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வருவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இதன்மூலம், விரைவாக லைசென்ஸ் வழங்கமுடியும் என்பதைவிட முறைகேடுகளும் பெருமளவில் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








