நிலநடுக்கத்தால் தொழிற்சாலைகளை மூடிய ஜப்பான் கார் நிறுவனங்கள்

Damaged Cars in Tsunami
டோக்கியோ: நிலநடுக்கம், சுனாமியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து ஜப்பானை சேர்ந்த நிசான்,ஹோண்டா,டொயோட்டோ கார் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை மூடியுள்ளன.

ஜ்ப்பானி்ல் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் லட்சக்கணக்கான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தில் நிசான், ஹோண்டா, டொயோட்டோ ஆகிய நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, மூன்று நிறுவனங்களும் தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன. ஜப்பானின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான நிசான், ஜப்பானிலுள்ள 4 தொழிற்சாலைகளையும், இரண்டு அலுவலகங்களையும் மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிசான் செய்திதொடர்பாளர் கூறுகையில்,"நிலநடுக்கத்தால் தொழிற்சாலைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதிக்காக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2,300 கார்கள் சுனாமியில் இழுத்து செல்லப்பட்டுவிட்டது," என்று கூறினார்.

இதேபோன்று, ஹோண்டா நிறுவனமும் ஜப்பானிலுள்ள 4 தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 13, 2011, 11:38 [IST]
English summary
The earthquake that struck northeastern Japan yesterday wrought damage and shut down operations of some of the nation’s largest car manufacturers, Nissan, Honda and Toyota.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+