இயான் எஃபெக்ட்: அக்டோபரில் சான்ட்ரோ விற்பனை குறைந்தது

Hyundai Santro
கடந்த மாதம் ஹூண்டாய் அறிமுகப்படுத்திய இயான் கார் விற்பனை அமோகமாக இருந்தது. அதேவேளை, இயான் வரவால் அந்த நிறுவனத்தின் சான்ட்ரோ கார் விற்பனை வெகுவாக குறைந்தது.

கடந்த மாதம் 13ந் தேதி இயான் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படு்த்தியது. ரூ.2.69 லட்சம் விலையில் புத்தம் புதிய மாடலாக வந்துள்ள இயான் வாடிக்கையாளர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.

மேலும், கடந்த மாதம் மட்டும் 6,315 இயான் கார்கள் விற்பனையானது. இதனால், ஹூண்டாய் நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.

அதேவேளை, அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலான சான்ட்ரோ விற்பனையை இயான் வெகுவாகவே பாதித்துள்ளது.

ஆம், சராசரியாக மாதத்திற்கு 6,000 சான்ட்ரோ கார்களுக்கு மேல் விற்பனையாகும். ஆனால், கடந்த மாதம் 3,141 சான்ட்ரோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இயான் எஃபெக்ட்டால் சான்ட்ரோ விற்பனை பாதியாக குறைந்துவிட்டது ஹூண்டாய் நிறுவனத்திற்கு இழப்பாக கருதப்படுகிறது.

மாருதி ஆல்ட்டோ உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பட்ஜெட் கார்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்ட இயான், தனது சொந்த நிறுவனத்தின் சான்ட்ரோ கார் விற்பனையிலேயே பாதி்பபை ஏற்படுத்தியுள்ளதுப.

இந்த நிலையில், கடந்த மாதம் வைக்கப்பட்ட விற்பனை இலக்கை கடந்து இயான் விற்பனையாகியுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 1.40 லட்சம் இயான் கார்களை விற்க ஹூண்டாய் இலக்கு வைத்துள்ளது. இதனால், மாதத்திற்கு சராசரியாக 11,400 இயான் கார்கள் விற்பனையாக வேண்டும்.

இந்த நிலையில், கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டு அரை மாதத்தில் 6,315 இயான் கார்கள் விற்பனையாகியுள்ளதால் சரியான இலக்கில் இயான் செல்வதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 18, 2011, 16:14 [IST]
English summary
Hyundai motors sold 6,315 units Eon cars for first month of launch in the Country.But the same time the company's best selling model santro sales drastically decline half of the numbers in last month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+