வாடிக்கையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் எடியோஸ்!

கடந்த நான்கு ஆண்டு காலமாக அனைவரையும் கவரும் வகையிலான காரை இந்தியாவில் களம் இறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது டொயோட்டா. தற்போது எடியோஸ் மூலம் தனது கனவை அது நனவாக்கியுள்ளது. இந்திய கார்ச் சந்தையில் எடியோஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
எடியோஸ் குறித்து வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு விதமாக புகழ்கிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இது ஒரு டொயோட்டா தயாரிப்பு என்பதால் இதை வாங்க விரும்புவதாக கூறுகிறார்கள். இருப்பினும் எடியோஸ் காரில் உள்ள பல்வேறு சவுகரியங்களும் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
குடும்பதோடு சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் இட வசதி சிறப்பாக இருப்பதாக பலரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் காரின் வடிவமைப்பும் பலரைக் கவர்ந்துள்ளது.
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எடியோஸ் மீது புது மோகம் பிறந்துள்ளதாம். மான்ஸாவை விட எடியோஸ் எலிகன்ட் ஆக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். திருப்திகரமான முறையில் எடியோஸ் இருப்பதாகவும் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
காரின் டேஷ்போர்ட், விசாலமான கேபின் ஆகியவை அற்புதமாக இருப்பதாக ஒருவர் திருப்தி தெரிவிக்கிறார். மொத்தத்தில் இடவசதி, விலை, காரை ஓட்டும் சொகுசு, எரிபொருள் சிக்கணம் என எல்லாவற்றிலும் எடியோஸ் பிரமாதமாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்.
இருப்பினும் பவர் ஸ்டியரிங் வசதி இல்லாதது ஒரு குறையாகத் தெரிகிறது. அதேபோல புக் செய்து விட்டு காத்திருக்க வேண்டிய காலம் சற்று அதிகமாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். அதையும் டொயோட்டா கவனித்தால் சற்று நல்லது.


Click it and Unblock the Notifications








