ரூ.5,000 முதல் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய டிக்கெட்?

Formula 1 Race
டெல்லி: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தய டிக்கெட்டுகள் விலை ரூ.5,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முதல்நிலை கார் பந்தயமான பார்முலா ஒன் கார் பந்தயங்கள் வரும் அக்டோபர் மாதம் முதன்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளன. டெல்லி அருகே நொய்டாவில் இந்த போட்டிகளுக்காக பந்தய ஓட்டப் பாதை அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான டிக்கெட் விலைகள் ரூ.5,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தர மக்களும் கார் பந்தயத்தை கண்டுகளிக்கும் வகையில், டிக்கெட் விலைகள் நிர்ணயிக்க போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், கிரிக்கெட் போட்டிகளில் டிக்கெட்டுகள் வி.ஐ.பி.,களுக்கு விற்பனை செய்வது போன்று, பார்முலா ஒன் கார் பந்தய டிக்கெட்டுகளையும் விற்றுவிட வாய்ப்பு இருப்பதாக கார் பந்தய ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கார் பந்தயத்தை கண்டுகளிக்க மாணவர்களுக்கு இலவச பாஸ் வழங்கவும் அவர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 19, 2011, 11:47 [IST]
English summary
The first Indian F1 GP to be organized at the Buddha International circuit has surfaced. The price of the tickets may start from Rs. 5formula 1 race000, and may go all the way up to Rs. 30,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+