ஃபெராரி 458 இட்டாலியாவுக்கு ஆட்டோ இதழின் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கார் விருது

பிரிட்டனை சேர்ந்த ஆட்டோ எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சர்வதேச அளவில் பிரபலமாக திகழ்கிறது. இந்த பத்திரிக்கை ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த கார்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
கையாளுமை, சாதாரண சாலைகள் மற்றும் ரேஸ் ட்ராக் ஆகியவற்றில் வைத்து கார்களை சோதனைகள் நடத்தி, அதன் அடிப்படையில் கார்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. பல முன்னணி நிறுவனங்களின் கார்கள் இந்த விருதுக்கான போட்டிகளில் முட்டி மோதின. அதில், இந்த ஆண்டின் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காருக்கான விருதை 458 இட்டாலியா பெற்றது.
இந்த விருதை ஃபெராரி 458 இட்டாலியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆட்டோ எக்ஸ்பிரஸ் இதழின் ஆசிரியர் ஸ்டீவ் ஃபாவ்லர் கூறுகையில்,"கட்டுறுதி, பிக்கப், வடிவமைப்பு என அனைத்து விதங்களிலும் ஃபெராரி 458 இட்டாலியாவை விஞ்ச காரில்லை.
எனவே, இந்த ஆண்டுக்கான சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காருக்கான விருதை ஃபெராரி 458 இட்டாலியா எளிதாக தட்டிச்சென்றது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








