எப்எப் சூப்பர் ஹேட்ச்பேக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஃபெராரி

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த ஃபெராரி நிறுவனம் டெல்லி ஜன்பத்தில் தனது ஷோரூமை அமைத்து இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது.
இந்திய வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு தனது சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களை அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், தனது சூப்பர் ஹேட்ச்பேக் காரான எப்எப் மாடலை டெல்லி ஷோரூமில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரில் 6.2 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 660 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதன் பேப்ரிக் இன்டிரியரும் மனதை கொள்ளை கொள்கிறது.


Click it and Unblock the Notifications








