இந்தியாவிலிருந்து இலங்கைக்கு லீனியா ஏற்றுமதி: ஃபியட் அறிவிப்பு

Fiat Linea
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு லீனியா செடான் கார் ஏற்றுமதியை ஃபியட் நிறுவனம் இன்று துவங்குகிறது.

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் ஒத்துழைப்புடன் கார் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை ஃபியட் முடுக்கிவிட்டுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, இலங்கைக்கு இன்று முதல் லீனியா செடான் கார் ஏற்றுமதியை ஃபியட் துவங்குகிறது.

இலங்கையில் அடியெடுத்து வைக்கும் ஃபியட் ஆண்டுக்கு முதலில் 5 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெற திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு கார் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இலங்கை தவிர அடுத்த நிதிஆண்டின் முதல் காலாண்டிலிருந்து நேபாளம், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கார்களை ஏற்றுமதி செய்யவும் ஃபியட் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 29, 2011, 13:21 [IST]
English summary
Italian car maker Fiat India announced its international expansion plans. Fiat started exporting of its Fiat Linea sedan to Sri Lanka market. Fiat also revealed it will export cars to Nepal and South Africa by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+