அடுத்த ஆண்டு ரூ.4 லட்சம் விலையில் சிறிய கார்-ஃபியட் திட்டம்

புன்ட்டோ ஹேட்ச்பேக் மற்றும் லீனியா செடான் கார்களை ஃபியட் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால், எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை எட்டமுடியவில்லை. இதையடுத்து, இந்திய சந்தைக்கு ஏற்றாற்போல் ரூ.4 லட்சத்திற்கும் குறைவான விலையில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்த ஃபியட் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், இந்திய சந்தையில் விற்பனை வளர்ச்சியை எளிதாக எட்ட முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. மேலும், ஹூண்டாய் ஐ10 மற்றும் மாருதி வேகன் ஆர் சந்தையை புதிய கார் உடைக்கும் என ஃபியட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்களுக்கும், தங்களுக்கும் இடைவெளி ஏற்படுவதாக உணர்ந்த ஃபியட் தனி ஷோரூம்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால், விற்பனையில் கூடுதல் வளர்ச்சி பெறமுடியும் என ஃபியட் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








