அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய புன்ட்டோ: ஃபியட் அறிவிப்பு

பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ கார் வாடிக்கையாளர்களின் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. பில்டு குவாலிட்டி, அதிக மைலேஜுடன் குறைந்த கார்பன் புகை வெளியிடும் எஞ்சின் என புன்ட்டோ பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.
மேலும், உள்பக்கம் தாராள இடவசதியை கொண்டிருப்பதால், குறைந்த தூரமோ அல்லது நீண்ட தூர பயணங்களோ புன்ட்டோ நிம்மதியான அனுபவத்தை தரும். இந்த நிலையில், அடுத்த தலைமுறை அம்சங்களுடனும், புதுப்பொலிவுடன் கூடிய தோற்றத்துடனும் புதிய புன்ட்டோவை ஃபியட் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
2012 புன்ட்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய புன்ட்டோ கார் பிராங்பர்ட் மோட்டார்ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய புன்ட்டோ பல மாற்றங்களை கண்டுள்ளது.
பாடி கலர் பம்பர், 15 இஞ்ச் அலாய் ரிம்கள் உள்ளிட்ட மாற்றங்களுடன் மூன்று வண்ணங்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புன்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
2012 புன்ட்டோ மாடல் சர்வதேச ஆட்டோ வல்லுனர்கள் மத்தியிலும், வாடிக்கையாளர் மத்தியிலும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








