புன்ட்டோவுக்கு ரூ.1.4 லட்சம், லீனியாவுக்கு ரூ.1.75 லட்சம் ஆஃபர்!

வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கார் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களை கவர கார் நிறுவனங்கள் ஏராளமான அதிரடி சலுகைகளை அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டும் கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மெகா சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை அதிர வைத்துள்ளது ஃபியட். மேலும், வரும் ஜனவரியில் மேம்படுத்தப்பட்ட புன்ட்டோ மற்றும் லீனியா கார்களை அறிமுகப்படுத்த உள்ளதால் ஃபியட் இருப்பை குறைக்க இந்த அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த அதிரடி சலுகைகள் பெட்ரோல் மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராண்டு புன்ட்டோ 1.2 எமோஷன் வேரியண்ட்டுக்கு ரூ.65,000 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில், 40,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.25,000க்கு பரிசு கூப்பனும் வழங்கப்படும்.
தவிர, ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் 50 மாதங்களுக்கான ரோடு சைடு அசிஸ்டென்ஸ் எனப்படும் சாலைகளில் ஏற்படும் அவசர உதவி திட்டத்தையும் சலுகையாக பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோன்று,1.4 எமோசன் வேரியண்ட்டுக்கு ரூ.1.15 லட்சம் சலுகை வழங்கப்படுகிறது. இதில், 75,000 பரிசு கூப்பனாகவும், ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற்றுக்கொள்ளலாம். தவிர, ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் 50 மாதங்களுக்கான சாலைகளில் அவசர உதவிக்கான சலுகையையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோன்று, லீனியா 1.4 பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ.90,000 சலுகை வழங்கப்படுகிறது. இதில், 40,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், 50,000 பரிசு கூப்பனும் வழங்கப்படும். தவிர, ஓர் ஆண்டுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் சாலை அவசர உதவி திட்டமும் உண்டு.
லீனியா 1.4 எமோசன் பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ.1.15 லட்சம் சலுகைகளை வழங்குகிறது. இதில்,ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், 75,000 பரிசு கூப்பனும் வழங்கப்படுகிறது. தவிர, மற்ற வேரியண்ட் போன்றே ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் 50 மாதங்களுக்கான இலவச அவசர உதவி சலுகை திட்டத்தையும் வழங்கப்படுகிறது.
லீனியா 1.4 டி-ஜெட் ப்ளஸ் பெட்ரோல் வேரியண்ட்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.75 லட்சம் சலுகை வழங்கப்படுகிறது. இதில், ரூ.1 லட்சத்துக்கு கிப்ட் செக் மற்றும் ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனசும் வழங்கப்படுகிறது. மீதம் ரூ.35,000 மதிப்புக்கு ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் 50 மாதங்களுக்கான இலவச சாலை அவசர உதவி திட்ட சலுகையையும் வழங்குவதாக ஃபியட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








