புகார் எதிரொலி: புண்டோ கார்களில் ஏ.சி.யை மாற்றி தருவதாக பியட் அறிவிப்பு

பியட் நிறுவனத்தின் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட புண்டோ மற்றும் லீனியா மாடல்களில் ஏ.சி.மெஷின்கள் தொடர்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தன. வெப்பநிலை 40 டிகிரிக்கும் மேல் இருக்கும்போது,காருக்குள் முழுமையான குளிரை ஏ.சி. மெஷின் தருவதில்லை என்று வாடிக்கையாளர்கள் குறை கூறினர்.
குறிப்பாக, நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக புகார்கள் வந்தன. இதையடுத்து, புண்டோ மற்றும் லீனியா கார்களில் ஏ.சி.மெஷினை மாற்றித் தருவதாக பியட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பியட் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியதாவது:
"பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட புண்டோ, லீனியா கார்களில் ஏ.சி.மெஷின் சரியாக கூலிங் தருவதில்லை என புகார்கள் வந்தன. இது சிறிய பிரச்சினைதான் என்றாலும், நல்லெண்ண அடிப்படையில் ஏ.சி.மெஷின்களை புதிதாக மாற்றித் தர முடிவு செய்துள்ளோம்.
வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட டீலர்களை தொடர்பு கொண்டு ஏ.சி.மெஷினை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








