ரியோ எஸ்யூவி்க்கு டீசல் எஞ்சின் தர ஃபியட்டை அணுகியது பிரிமியர்

Premier Rio SUV
மார்க்கெட்டில் ஒரே மினி எஸ்யூவியாக வலம் வரும் தனது ரியோ மினி எஸ்யூவிக்கு டீசல் எஞ்சின் வழங்குமாறு ஃபியட் நிறுவனத்தை பிரிமியர் அணுகியுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனமும், இந்தியாவை சேர்ந்த பிரிமியர் நிறுவனமும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டன. மேலும், பிரபலமான பிரிமியர் பத்மினி காரை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வந்தன.

இந்த நிலையில், இரு நிறுவனங்களும் பிரிந்து தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரிமியர் நிறுவனம் விற்பனை செய்து வரும் ரியோ மினி எஸ்யூவி வாடிக்கையாளர் கவனத்தை ஈர்த்துள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை ரியோ எஸ்யூவியில் பொருத்தி விற்பனை செய்ய பிரிமியர் முயன்று வருகிறது. தற்போது ரியோ மினி எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும், ரியோவின் டீசல் எஞ்சின் போதுமான ஃபெர்ஃபார்மென்ஸ் இல்லை என்பதை பிரிமியர் புரி்ந்துகொண்டுள்ளது. இதையடுத்து, அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சினை ரியோ எஸ்யூவியில் பொருத்த பிரிமியர் முடிவு செய்துள்ளது.

இதற்காக, பழைய பார்ட்னர் ஃபியட்டை அணுகியுள்ளது பிரிமியர். இதற்கு ஃபியட்டுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்துள்ளதாக பிரிமியர் தெரிவித்துள்ளது. மாருதி ஸ்விப்ட் மற்றும் டாடா இண்டிகாவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை பிரிமியர் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதற்காக இரு நிறுவனங்களுக்கு இடையிலும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 22, 2011, 17:33 [IST]
English summary
Premier Ltd, the erstwhile partner of Fiat is all set to strike a deal with the Italian carmaker. Premier which enjoyed a fruitful partnership with Fiat when it was building the Premier Padmini. Now the partnership will be rekindled after Premier approached Fiat for diesel engines for the Rio Compact SUV.The Premier Rio is India's only compact SUV and is available with both petrol and diesel engines. However Premier did not have a highly efficient diesel engine and was not keen to invest in developing a new one. Hence it is now looking at the 1.3-litre turbo diesel diesel engine that is already available in the Maruti Suzuki Swift and the Tata Indica
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+