இந்த ஆண்டின் சிறந்த எஞ்சினாக ஃபியட் டர்போ தேர்வு

Fiat Engine
ஸ்டட்கார்ட்: இந்த ஆண்டின் சிறந்த எஞ்சினுக்கான சர்வதேச விருதை ஃபியட் டர்போ எஞ்சின் பெற்றுள்ளது.

ஜெர்மனியிலுள்ள ஸ்டட்கார்ட் நகரில், கார் எஞ்சின்கள் கண்காட்சி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களின் விதவிதமான எஞ்சின்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த கண்காட்சியில் இந்த ஆண்டின் சிறந்த கார் எஞ்சின்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டன. ஆட்டோமொபைல் வல்லுனர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அடங்கிய நீதிபதி குழுவினர் இந்த ஆண்டின் சிறந்த எஞ்சின்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்து அறிவித்தனர்.

இதில், இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனத்தின் 875சிசி திறன்கொண்ட டர்போ எஞ்சின், இந்த ஆண்டிற்கான சிறந்த எஞ்சின் விருதை பெற்றது. மேலும், சிறந்த அறிமுக எஞ்சினாகவும் தேர்வு செய்யப்பட்டது.

குறைந்த மாசு, எரிபொருள் சிக்கனம், அதிக பிக்கப் என பட்டைய கிளப்பும் ஃபியட் டர்போ எஞ்சினை பார்த்து நீதிபதி குழுவினரே வியந்து பாராட்டினர். இந்த எஞ்சின் தற்போது ஃபியட் 500 காரில் பயன்படுத்தப்படுகிறது.

ஃபியட் டர்போ போன்றே, பிஎம்டபிள்யூவின் எஞ்சின்கள் நான்கு பிரிவுகளில் விருதுகளை அள்ளியது. 4 லிட்டர் வி8 எஞ்சின் ரகத்தில் பிஎம்டபிள்யூ எஞ்சின் சிறந்ததாக தேர்வானது. இதேபோன்று, 1 லிட்டர் முதல் 1.4 லிட்டர் பிரிவில் வோக்ஸ்வேகன் எஞ்சினும், 4.5 லிட்டர் பிரிவில் ஃபெராரி எஞ்சினும் சிறந்ததாக தேர்வானது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 21, 2011, 13:34 [IST]
English summary
Fiat’s 875cc two-cylinder Twin Air has won the 2011 International Engine of the Year Award at the Engine Expo in Stuttgart in Germany. There were expert judges as well as some of the world’s most renowned motor journalists.
 All were awed at the performance of the engine that was extremely low on emissions, high on fuel economy and was powerful enough in its category.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+