பியஸ்ட்டா கிளாசிக் மாடலை அறிமுகப்படுத்த ஃபோர்டு தீவிரம்

By
Ford Fiesta Hatchback
சென்னை: இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பியஸ்ட்டா கிளாசிக் மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய பிகோ ஹேட்ச்பேக் கார்,கடந்த ஆண்டு விற்பனையில் சக்கை போடு போட்டது.பிகோ விற்பனை கொடுத்த உற்சாகத்தை தொடர்ந்து,செடான் வகை கார் சந்தையை பிடிக்கவும் ஃபோர்டு நிறுவனம் முழு வீச்சில் களமிறங்கியுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் செடான் வகையை சேர்ந்த பியஸ்ட்டா இந்திய மக்களை வெகுவாக கவர்ந்த மாடலாகும்.இந்த வரிசையில்,பியஸ்ட்டா கிளாசிக் மாடலை,இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

பியஸ்ட்டாவை விட அளவில் சற்று பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ள,கிளாசிக் மாடல் காண்போரை கவர்ந்திழுக்கும் வெளி்ப்புற தோற்றத்துடன் வரவுள்ளது.இதில்,அதிக சக்தி கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால் அதிக பிக்அப் கிடைக்கும்.இதேபோன்று,தற்போதுள்ள 1.4 லிட்டர் டீசல் எஞ்சின், 1.6லிட்டர் எஞ்சினாக மேம்படுத்தப்படும்.

இதில்,அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் காரை எளிதாக ஓட்ட முடியும்.காரின் டேஸ்போர்டு நவீன வடிவமைப்பு கொண்ட பிளாஸ்டிக் மோல்டு டிசைன் கொண்டு பொருத்தப்பட்டுள்ளது.இதுதவிர, காரின் உட்புறத வடிவமைப்புகளிலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தத்தில் இதுவரை பார்த்திராத வகையி்ல் பியஸ்ட்டா கிளாசிக் மாடல் இருக்கும் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.நவீன தொழில்நுட்ப தரத்துடன்,புதிய வடிவமைப்புடன் கூடிய பியஸ்ட்டா கிளாசிக் கார்,ரூ.6.80லட்சம் முதல் ரூ.7.70லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 1, 2011, 11:11 [IST]
English summary
Ford India is contemplating on the change of brand name for Fiesta as Fiesta Classic once the Fiesta range of 299 gets launch later this year.Its new technologies combined Japanese and European standards to take the generation next. Ford aims to launch this car during Q2 of this year with the proposed price of Rs6.80 lakh – Rs7.70 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+