ஓசூர் லைலேண்ட் ஆலையில் டோஸ்ட் மினிடிரக் உற்பத்தி துவக்கம்

Leyland Dost Minitruck
ஓசூர்: ஓசூரிலுள்ள அசோக் லைலேண்ட் தொழிற்சாலையின் புதிய பிரிவில், 1.5 டன் திறன் கொண்ட டோஸ்ட் மினி டிரக் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.

கனரக வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற அசோக் லேலண்ட் நிறுவனம், ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்துடன் இணைந்து மினிடிரக் தயாரி்ப்பில் இறங்கியுள்ளது.

இரு நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்துள்ள முதல் மினிடிரக்குக்கு டோஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மினிடிரக் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஓசூரிலுள்ள அசோக் லைலேண்ட் ஆலையில் டோஸ்ட் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஓசூர் ஆலையில் தனி பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது டோஸ்ட் மினிடிரக் முறைப்படி உற்பத்தி பிரிவிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், அசோக் லைலேண்ட்- நிசான் கூட்டுக்குழுமத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டோஸ்ட் 1.5 டன் கொள்ளளவு திறன் கொண்டது. சிஆர்டிஐ காமன் டீசல் எஞ்சினுடன் வர இருக்கும் இந்த புதிய மினிடிரக் அதிக மைலேஜ் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 4.8 மீட்டர் சுற்றளவுக்குள் திருப்பும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேபினும் புதுமையான வடிவமைப்புடன் அழகுற காட்சியளிக்கிறது. மூன்று மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மினிடிரக்கின் உயர்வகை மாடலில் கேபினில் ஏசி வசதி, பவர் ஸ்டியரிங், இரட்டை கலர் உள்ளிட்ட அம்சங்களுடன் இருக்கும்.

டோஸ்ட் மினிடிரக்குகள் புதிதாக நியமிக்கப்படும் டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுகம் செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்பு விலை விபரங்களை வெளியிட அசோக்லைலேண்ட்-நிசான் கூட்டுக்குழுமம் முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 24, 2011, 12:32 [IST]
English summary
Ashok Leyland and Nissan Motor Company on Friday rolled out their first product, the Ashok Leyland DOST, from Ashok Leyland’s Hosur facility. The first production vehicle was symbolically driven out from the dedicated newly commissioned Light Commercial Vehicle line.DOST will be available in three versions with the top-end version featuring air-conditioning, power steering, dual-colour beige-gray trim and fabric seats.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+