ரூ.10.65 லட்சத்தில் புதிய எஸ்யூவி கார்: ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம்

ForceOne Launch
அசத்தும் வடிவமைப்பு, ஆர்ப்பாட்டமான அம்சங்களுடன் புத்தம் புதிய எஸ்யூவி காரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நேற்று அறிமுகம் செய்தது.

கம்பீரத்தை பரைசாற்றும் எஸ்யூவி கார்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்து வருகிறது. எந்தவித சாலைகளிலும் அசராமல் பயணிக்கும் ஆற்றல்வாய்ந்த எஸ்யூவி கார்களை பல முன்னணி நிறுவனங்கள் சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.

டெம்போ டிராவலர் பயணிகள் வேன் மூலம் புகழ் மணம் பரப்பி வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளது. 2.2 லிட்டர் மெர்சிடிஸ் பென்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோர்ஸ்ஒன் என்ற பெயரில் புத்தம் புதிய எஸ்யூவி காரை நேற்று ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் நடந்த விழாவில் ஃபோர்ஸ்ஒன் எஸ்யூவி காரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் அறிமுகம் செய்தார். இவர் ஃபோர்ஸ்ஒன் காரின் விளம்பர தூதராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசரவைக்கும் வடிவமைப்புடன் வந்துள்ள இந்த புதிய எஸ்யூவி கார் முன்பக்கம் பார்த்து அமர்ந்து செல்லும் மூன்று வரிசை இருக்கைகள் கொண்டது. இதில், 7 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம். 5ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இந்த எஸ்யூவி லிட்டருக்கு 11.6 கிமீ செல்வதாக ஏஆர்ஏஐ சான்று கூறுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் கார்களில் பொருத்தப்படும் 2148சிசி எஞ்சினுடன் ஃபோர்ஸ்ஒன், முன்னணி எஸ்யூவி கார்களுடன் ஆற்றலில் மார்தட்டும். தற்போது பாரத் ஸ்டேஜ்-4 தர அம்சத்துடன் வந்துள்ள இந்த காரின் எஞ்சினை பாரத் ஸ்டேஜ்-5 தரத்திற்கு ட்யூனிங் செய்து அறிமுகம் செய்யவும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

16 இஞ்ச் அலாய் வீல் ஃபோர்ஸ்ஒன் எஸ்யூவிக்கு மிடுக்கான தோற்றத்தை அளிக்கிறது. பகல் நேரத்தில் முகப்பு விளக்குகளில் ரன்னிங் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது 2வீல் டிரைவ் கொண்டதாக வந்துள்ள ஃபோர்ஸ்ஒன், விரைவில் ஆல் வீல் டிரைவ் கொண்ட மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஃபோர்ஸ்.

தவிர, ஏர்பேக்ஸ், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல்களை வரும் 2013ம் ஆண்டு முதல் சந்தைக்கு கொண்டு வர ஃபோர்ஸ் திட்டமிட்டுள்ளது. ஃபோர்ஸ்ஒன் வந்த தெம்பில் தற்போதுள்ள டீலர் எண்ணிக்கையை 22லிருந்து 44ஆக அதிகரிக்கவும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. வரும் 1ந் தேதி முதல் ஷோரூம்களில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்ஸ்ஒன்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 20, 2011, 10:41 [IST]
English summary
Force Motors have launched the Force One SUV, its first such product as it plans to enhance its presence in the passenger car business. With a brand ambassador like Amitabh Bachchan, Force Motors' Personal Vehicles Division will make its foray with 22 dealerships to begin with as the vehicle hits showrooms from 1st September.Rs 10.65 lakhs, ex-showroom, Delhi. The ARAI fuel efficiency cycle rates the Force One at 11.6 kilometres per litre. Powered by a 2148cc, inline-four diesel engine, the Force One produces 138 bhp and 32 kgm of peak torque. This motor, called the 2.2 FMTech is originally a Mercedes-Benz engine that used to power the last C-Class as well as the W210 E-Class. Mated to a 5-speed manual, the powertrain has been tuned in-house while the dynamics have been tweaked by Lotus Engineering. The motor is currently BS-IV ready but can be tuned for BS-V norms as well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+