அடுத்த ஆண்டு எம்பிவி கார் அறிமுகம்: ஃபோர்ஸ் அறிவிப்பு

டெம்போ டிராவலர், ட்ராக்ஸ் உள்ளிட்ட வர்த்தக பயணிகள் வாகனங்களை தயாரித்து வரும் ஃபோர்ஸ் நிறுவனம் விரைவில் ஃபோர்ஸ்ஒன் என்ற பெயரில் புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம், கார் மார்க்கெட்டில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கால் பதிக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் ஏஜி(மெர்சிடிஸ் பென்ஸ்)நிறுவனத்திடமிருந்து ஃபோர்ஸ்ஒன் காருக்கு எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றை பெறுவதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த எஸ்யூவி காரில் டெய்ம்லர் ஏஜி நிறுவனத்தின் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு புதிய எம்யூவி காரை அறிமுகப்படுத்த இருப்பதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இந்த காருக்கும் டெய்ம்லர் நிறுவனத்திடமிருந்து எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தை ஃபோர்ஸ் பெற இருக்கிறது. இதுதொடர்பாக, இரு நிறுவனங்களுக்கும் இடையில் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து ஃபோர்ஸ் மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,"அடுத்த ஆண்டு புதிய எம்பிவி காரை அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்காக, மத்திய பிரதேச மாநிலம், பீதம்பூரில் புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக, அம்மாநில அரசுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 24,000 கார்களை தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலை கட்டப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








