ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட புதிய டெம்போ டிராவலர்: ஃபோர்ஸ் அறிவிப்பு

வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தனது வர்த்தகத்தை வெகுவாகவே விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், வர்த்தக பயணிகள் மார்க்கெட்டில் நீண்ட காலமாக தனி இடத்தை தக்கவைத்து வரும் தனது டெம்போ டிராவலர் வேனின் புதிய ஹைபிரிட் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பிரசன் பிரோடியா கூறியதாவது:
"டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஹைபிரிட் டெம்போ டிராவலர் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்த உள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய ஹைபிரிட் டிராவலர் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த புதிய ஹைபிரிட் வாகனத்தின் தொழில்நுட்பத்தை இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறோம். தவிர, இயற்கை எரிவாயுவில்(சிஎன்ஜி) செல்லும் டெம்போ டிராவலர் வேனை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
தவிர, 9 இருக்கைகள் கொண்ட எம்பிவியை மெர்சிடிஸ் பென்சிடம் லைசென்ஸ் பெற்று வடிவமைத்து வருகிறோம். இந்த புதிய எம்பிவி ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications








