சென்னையில் புதிய ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி: ஃபோர்ஸ் அறிமுகம்

Force One SUV
ரூ.10.84 லட்சத்தில் சென்னையில் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெம்போ டிராவலர் வேன் மூலம் புகழ்பெற்ற ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் ஃபோர்ஸ் ஒன் என்ற பெயரில் புத்தம் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தது.

அட்டாகசமான ஸ்டைல், அதிக பிக்கப் கொண்ட எஞ்சின் உள்ளிட்டவற்றுடன் வந்துள்ள ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முதலாக மும்பையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய எஸ்யூவி தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூமில் இந்த எஸ்யூவியை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசன் பிரோடியா அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த புதிய எஸ்யூவியில் 2.2 லிட்டர் எஞ்சினை பொருத்தியுள்ளது ஃபோர்ஸ் மோட்டார்ஸ். இந்த எஞ்சினை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து லைசென்ஸ் பெற்று ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய எஸ்யூவி 4 கலர்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி மார்க்கெட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனையாகிறது. இதில், ஆண்டுக்கு 6,000 முதல் 7,000 ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியை விற்பனை செய்ய ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இலக்கு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 26, 2011, 10:58 [IST]
English summary
Force motors has launched Force one SUV in Chennai. The new suv equipped with 2.2 liter engine and it priced at Rs.10.84 lakhs(Ex showroom Chennai)
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+