மெர்சிடிஸ் பென்ஸ் பிளாட்ஃபார்மில் புதிய எம்பிவி கார்: ஃஃபோர்ஸ் அறிவிப்பு

Benz Viano
டெல்லி: டெம்போ டிராவலர் தயாரிப்பு மூலம் வர்த்தக பயணிகள் வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ரூ.11 லட்சத்தில் புதிய ஃபோர்ஸ்ஒன் என்ற எஸ்யூவி காரை களமிறக்கியுள்ளது.

இதன்மூலம், கார் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ள அந்த நிறுவனம் அடுத்து இன்னோவா கார் மாடல் போன்ற புதிய எம்பிவி காரை வடிவமைத்து வருகிறது.

இந்த கார் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. ஆம், இந்த கார் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வயனோ எம்பிவி கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டதை அறிவீர்கள்.

மெர்சிடிஸ் பென்ஸ் வயனோ எம்பிவி கார் பிளாட்பார்மில் உருவாகும் கார் என்பதால் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் புதிய எம்பிவி கார் அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த புதிய கார் தரம், வடிவமைப்பு, சொகுசு என அனைத்து அம்சங்களிலும் வயனோவை ஒத்திருக்கும் என கருதப்படுகிறது.

மேலும், டாடா விங்கர் வேனுக்கு இந்த புதிய எம்பிவி கார் கடும் போட்டியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, புதிய வேன்கள் மற்றும் வாகனங்களையும் மெர்சிடிஸ் பென்ஸ் கூட்டில் தயாரிக்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் முயன்று வருகிறது. மேலும், இந்தியர்களிடம் டெம்போ டிராவலர் வேன் நன்மதிப்பை பெற்றுள்ளது.

இதை பயன்படுத்தி புதிதாக 28 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் புதிய டெம்போ டிராவலர் பயணிகள் வேனையும் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Force Motors which only put the two wheel drive Force One on to the market has said it will soon launch two more models. One of them will be the four wheel drive Force One SUV while the other model will be a new MPV. We had earlier reported that Force would soon launch a new MPV. Reports say the new MPV will be built on the platform on which Mercedes-Benz builds its Viano MPV. Daimler and Force Motors have have long standing relationship. The German company has been offering technological assistance to Force in all its people movers and vans. The Mercedes-Benz Viano is a MPV that is being sold all across the globe. It has a reputation of offering the services of a van while delivering the luxury of a car.
Story first published: Wednesday, August 31, 2011, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X