சொகுசு அம்சங்களுடன் ட்ராக்ஸ் ஜீப்பை அறிமுகப்படுத்த ஃபோர்ஸ் ஆயத்தம்

டெம்போ டிராவலர், ட்ராக்ஸ் ஆகிய வர்த்தக வாகனங்கள் மூலம் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் எஸ்யூவி தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.
அந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபோர்ஸ்ஒன் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, ட்ராக்ஸ் ஜீப்பையும் சொகுசான அம்சங்களுடன் அறிமுகப்படுத்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக ட்ராக்ஸ் ஜீப் மலைப்பாங்கான பகுதிகளின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும், டூர் ஆப்பரேட்டர்களும் ட்ராக்ஸ் ஜீப்பை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். 12 பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணம் செய்யும் வசிதிகொண்ட ட்ராக்ஸ் வர்த்தக பயன்பாடுகளுக்கு ஏற்ற வாகனமாக திகழ்கிறது.
ஆனால், ட்ராக்ஸ் ஜீப்பில் செல்லும்போது கட்டை வண்டியில் செல்வது போன்று இருப்பதால், பல வாடிக்கையாளர்கள் ட்ராக்ஸ் மீது கவனம் செலுத்துவதில்லை.
சொகுசான அம்சங்கள் இல்லை என்பதால்தான் சாதாரண வாடிக்கையாளர்கள் ட்ராக்ஸ் பக்கம் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் அம்சங்களுடனும், கூடுதல் சொகுசு வசதிகளுடன் வர இருக்கிறது ட்ராக்ஸ் ஜீப்.
பாரத் ஸ்டேஜ்-4 அம்சம் கொண்ட ஓஎம்-616 சிஆர்டிஐ எஞ்சினுடன் ட்ராக்ஸ் அறிமுகம் செய்ய ஃபோர்ஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. புதிய சொகுசு வசதிகளுடன் வரும் ட்ராக்ஸ் ஜீப் எஸ்யூவி கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தம் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








