சந்தை போட்டி: கூடுதல் வசதிகளுடன் ஃபோர்டு பிகோ

Ford Figo Red
புதிய கார் மாடல்களின் வரவால் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கும் விதமாக பிகோவில் கூடுதல் வசதிகளுடன் களமிறக்குகிறது ஃபோர்டு.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிகோ கார் குறுகிய காலத்தில் விற்பனையில் முக்கிய இடத்தை பிடித்தது. இதனால், அதளபாதாளத்தில் இருந்த ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை திடீரென உயர்ந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வருவதாலும், சரியான விலை, அழகிய வடிவமைப்பு, அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் என அனைத்து அம்சங்களிலும் பிகோ நல்ல தேர்வாக இருந்ததால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், புதிய ஸ்விப்ட், ஹோண்டா பிரியோ, டொயோட்டோ எட்டியோஸ் என புதிது புதிதாக ஹேட்ச்பேக் கார்கள் அடுத்தடுத்து களமிறங்கியுள்ளதால் பிகோவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது மாதத்துக்கு சராசரியாக 5,000 பிகோ கார்கள் விற்பனையாகி வருகிறது.

இதுதான் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிகோ விற்பனை படுத்துக்கொண்டால் மொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்று விழித்துக்கொண்ட ஃபோர்டு நிறுவனம் கூடுதல் வசதிகளுடன் பிகோவை விற்பனை செய்ய உள்ளது.

கூடுதல் வசதிகள்:

இசட்எக்ஸ்ஐ மற்றும் டைட்டானியம் வேரியண்ட் பிகோவில் இனி டில்ட் ஸ்டீயரிங்குடன் கிடைக்கும்.இதேபோன்று யுஎஸ்பி போர்ட்டுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் மேற்கண்ட இரண்டு வேரியண்ட்களில் இருக்கும்.டைட்டானியம் வேரியண்ட்கள் இனி அலாய் வீல் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2011, 17:19 [IST]
English summary
It would be a lie if we say Ford has been been successful in India without the help of the Figo. In fact the Figo can be credited with improving Ford's image as well as sales within a short span of time. The Figo has achieved so much thanks to its responsive engine, good looks and low maintenance.However the Figo's position in the market can be under threat considering the arrival of several new rivals. These rivals include the Toyota Etios Liva,Honda Brio, Hyundai i20 and the Maruti Suzuki Swift. At this position Ford has decided to add three new features to retain the keep the Figo attractive.
மேலும்... #ford #automobiles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+