ஜெனிவா மோட்டார் ஷோவில் ஃபோர்டின் புதிய கார் அறிமுகம்

Ford B Max
ஜெனிவா: ஜெனிவா மோட்டார் ஷோவில் பி-மேக்ஸ் என்ற எம்பிவி ரகத்தை சேர்ந்த புதிய காரை ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா நகரில் சர்வதேச கார் கண்காட்சி நடந்து வருகிறது. உலக அளவில் புகழ்வாய்ந்த இந்த கார் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளன.

சர்வதேச அளவில் சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரித்து வருவதை கருதி பல்வேறு நிறுவனங்கள் புதிய அம்சங்கள் நிறைந்த சிறிய கார்களை அதிக அளவில் இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தி உள்ளன. இந்த கண்காட்சியில் ஃபோர்டு நிறுவனமும் பி-மேக்ஸ் என்ற பல்வகை பயன்பாட்டு ரகத்தை(எம்பிவி) சேர்ந்த புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பியஸ்ட்டா செடான் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் 3சிலிண்டர் 1.0 லிட்டர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் எஞ்சினுடன் வர உள்ளது. ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், டைரக்ட் இன்ஜெக்சன் மற்றும் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் அம்சங்களுடன் இது வெளிவர உள்ளது.

முதன்முறையாக ஜெனிவா மோட்டார் ஷோவில் பி-மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஏற்கனவே உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 பேர் அமரும் இருக்கை வசதிகொண்ட இந்த கார் ஹேட்ச்பேக் ரகத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ஃபோர்டு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 3, 2011, 14:17 [IST]
English summary
Sensing the s excellent market potential for the coming years among the small cars, Ford has unveiled its compact MPV B-Max at the Geneva Motor Show recently.Ford is designing this car on Fiesta platform with the power from 3-cylinder turbo 1.0 lit engine. This car will be 5-seater to be a novel method in compact MPVs, petrol version, auto start-stop option, direct injection, and is capable of delivering less carbon emission.
மேலும்... #geneva motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+