ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு துணை நிற்கும் சென்னை சேவை மையம்

Ford
சென்னை: ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தக பணிகளில் சென்னையிலுள்ள வர்த்தக சேவை மையம் (எப்.பி.எஸ்.,) முக்கிய பங்கு வகித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், அமெரிக்கா உள்பட தனது உலகலாவிய வர்த்தக பணிகள் முழுவதையும், சென்னையிலுள்ள வர்த்தக சேவை மையம் மூலம் மேற்கொண்டு வருகிறது.

இங்கு, ஃபோர்டு நிறுவனத்தின் வரவு செலவுகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு உள்ளி்ட்ட 650 விதமான பின்புல பணிகள் நடக்கின்றன.

இந்த சேவை மையம் ஃபோர்டு நிறுவனத்தின் அச்சாணியாக விளங்குவதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஃபோர்டு வர்த்தக சேவை மையத்தின் தலைவர் ஜோகிந்தர் சிங் கூறியதாவது:

"சென்னை வர்த்தக மையம் ஃபோர்டு நிறுவனத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சேவை மையத்தில் 5,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 800 ஊழியர்கள் நிறுவனத்தின் உலகளாவிய வரவு செலவு பணிகளை கவனிக்கின்றனர்.

இதுதவிர, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டீலர்களுக்கு கடன் வழங்குதல், கம்ப்யூட்டரில் கார் வடிவமைக்கும் பணிகளும் நடக்கின்றன. மொத்தத்தில் ஃபோர்டு மோட்டார்சை சென்னை வர்த்தக மையம்தான் இயக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.

உலக பொருளாதார சரிவின்போது, வட அமெரிக்க ஃபோர்டு நிறுவனத்தின் சிக்கன நடவடிக்கைகளில் சென்னை சேவை மையம் வழங்கிய ஆலோசனைகள் பெரிதும் கைகொடுத்தன. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் ஃபோர்டு நிறுவனங்களின் நிதி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

சென்னை தவிர, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஃபோர்டு வர்த்தக சேவை மையத்தை விரிவாகக்கம் செய்ய உள்ளோம். அங்கு, புதிதாக 375 பேரை பணியமர்த்த இருக்கிறோம். கோயம்புத்தூர் வர்த்தக சேவை மையத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, May 2, 2011, 12:57 [IST]
English summary
Ford Business Services Centre (FBS) in Chennai has helped the global automobile giant Ford from US. Adding, the centre has gained importance steadily for the US auto major Ford Motor so much so that it was even involved in cost reduction for Ford North America during the recession.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+