ஃபோர்டு-ஃபெராரி பிராண்டு பெயர் சண்டை சமாதானத்தில் முடிந்தது

அமெரிக்காவை சேர்ந்த வாகன தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனம் எப்-150 என்ற பெயரில் பிக்கப் டிரக்குகளை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பிக்கப் டிரக் என்ற பெருமையும் எப்-150 டிரக்குக்கு உள்ளது.
இந்நிலையில், இத்தாலியை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான ஃபெராரி நிறுவனம், தனது புதிய ஸ்போர்ட்ஸ் காருக்கு எப்150 என பெயர் வைத்தது. இதற்கு ஃபோர்டு நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இரு நிறுவனங்களின் எப்150 அடங்கிய சின்னமும்(லோகோ) ஒரே மாதிரி இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
புகழ்பெற்ற தனது எப்-150 சின்னத்தை ஃபெராரி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக கூறி, அமெரிக்காவிலுள்ள டெட்ராய்டு மாவட்ட கோர்ட்டில் ஃபோர்டு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து,சட்ட சிக்கலை தவிப்பதற்காக தனது புதிய ஸ்போர்ட்ஸ் காரின் பெயரை 'F150th இட்டாலியானா' என பெயர் மாற்றம் செய்தது ஃபெராரி.
இதனால், கோபம் தணிந்த ஃபோர்டு நிறுவனம், ஃபெராரியுடன் சமாதானமாக போக முடிவு செய்துள்ளது. மேலும், ஃபெராரி மீது டெட்ராய்டு கோர்ட்டில் தொடர்ந்த வழக்கையும் திரும்ப பெற்றுள்ளது. இருப்பினும், புதிதாக சூட்டப்பட்டுள்ள பெயரிலும் F மற்றும் 150 ஆகிய எழுத்து மற்றும் எண்கள் இருப்பதற்கு ஃபோர்டு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினை சுமூகமாக முடியும் என்று ஃபோர்டு நம்பிக்கை தெரிவித்துள்ளது. வரும் 27ந்தேதி ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபெராரியின் புதிய கார் பங்கு பெற உள்ள நிலையில் பெயர் பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








