யூஸ்டு கார் விற்பனையில் இறங்கிய ஃபோர்டு: 5 ஷோரூம்களை திறந்தது

டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், புனே மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் 'ஃபோர்டு அஸ்யூர்டு' என்ற பெயரில் 5 செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை ஷோரூம்களையும் திறந்துள்ளது.
செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை சந்தையின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, செகன்ட் ஹேண்ட் கார் விற்பனையில் குதித்துள்ளதாக ஃபோர்டு இந்தியா தெரிவித்துள்ளது. மேலும, வரும் காலங்களில் செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட் இமாலய உயரத்தை எட்டும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபோர்டு இந்தியாவின் விற்பனை மற்றும் சேவை பிரிவு நிர்வாக இயக்குனர் நிகில் வார்க் கூறியதாவது:
"வருவாய் உயர்வு காரணமாக நடுத்தர பிரிவினர் கார் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால், செகன்ட் ஹேண்ட் கார் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. செகன்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் சரியான தருணத்தில் இறங்கியுள்ளதாகவே கருதுகிறோம்.
முதன்முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 169 வகை மல்டி செக்கப்புக்களுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சர்வீஸ் வசதிகளுடன் செகன்ட் ஹேண்ட் காரை விற்பனை செய்ய உள்ளோம். மேலும், அனைத்து பிராண்டு செகன்ட் ஹேண்ட் கார்களுக்கும் 20,000 கி.மீ.க்கு ஒரு வருட வாரண்டியை வழங்குகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








