குறைந்த விலை கொண்ட நடுத்தர ரக ஃபியஸ்ட்டா கார்:ஃபோர்டு அறிமுகம்

Fiesta Classic
சென்னை: இந்திய சந்தைக்கு கனக்கச்சிதமாக பொருந்தும் விலையில், ஃபியஸ்ட்டா கிளாசிக் என்ற நடுத்தர செடான் காரை ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஃபியஸ்ட்டா என்ற சொகுசு செடான் காரை ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஐகான் கார் போன்றே, ஃபியஸ்ட்டா காரும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐகான் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த இடத்தை நிறைவு செய்யும் வகையில், குறைந்த விலை கொண்ட ஃபியஸ்ட்டா காரை ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

1.6லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட இரண்டு மாடல்களில் ஃபியஸ்ட்டா கிளாசிக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு இந்தியா மேலாண் இயக்குனர் மைக்கேல் போனிஹம் கூறுகையில்,"ஃபியஸ்ட்டா கிளாசிக் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். மேலும், குளோபல் ஃபியஸ்ட்டா கார் மாடல் திட்டமிட்டபடி இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும்," என்றார்.

சென்னையில் ஃபியஸ்ட்டா கிளாசிக் பெட்ரோல் மாடல் ரூ.5.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.05 லட்சம் விலையிலும் கிடைக்கும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 4, 2011, 11:45 [IST]
English summary
Ford Motor India today introduced a cheaper version of the sedan in the Indian market, dubbed 'Fiesta Classic'. "Fiesta Classic represents the appropriate product in the mid-size segment," Ford Motor India Managing Director Michael Boneham told reporters here after unveiling the car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+