புத்தம் புதிய ஈக்கோ ஸ்போர்ட் சியூவியை களமிறக்கும் ஃபோர்டு

ஆம். ஹேட்ச்பேக் வடிவமைப்பில் எஸ்யூவி கம்பீரத்துடன் வரும் இந்த காம்பெக்ட் யுடிலிட்டி வெகிக்கிள்(சியூவி) ரகத்தை சேர்ந்த இந்த கார் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கிறது.
மேலும், இது 4 மீட்டருக்குள் நீளம் கொண்ட காராக இருக்கும் என்பதால் மத்திய அரசின் வரி விலக்கை பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த காரை ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
மத்திய அரசின் விதிப்படி 4 மீட்டருக்குள் இருக்கும் காராக இருந்தாலும் அது 1.2 லிட்டர் ரகத்திற்குள் உள்ள பெட்ரோல் எஞ்சினையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, ஆல் நியூ பியஸ்ட்டாவில் இருக்கும் 1.4 லிட்டர் டிடிசிஐ டீசல் எஞ்சினை புதிய ஈக்கோ ஸ்போர்ட்டில் பொருத்தி அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஆனால், ஈக்கோ ஸ்போர்ட்டுக்கு பெட்ரோல் எஞ்சினில்தான் தகராறு இருக்கிறது.
பிகோவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் டியூராடெக் எஞ்சினை ஈக்கோ ஸ்போர்ட்டில் பொருத்தலாம் என்றால் கம்பீரமான இந்த காரின் எடையை அது இழுக்காது, பிக்கப்பும் கிடைக்காது. எனவே, சமீபத்தில் அறிமுகம் செய்த 1.0 லிட்டர் புதிய ஈக்கோ பூஸ்ட் எஞ்சினை ஈக்கோ ஸ்போர்ட்டில் பொருத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஈக்கோ பூஸ்ட் எஞ்சின் குறைந்த கார்பன் புகையை வெளியிடுவதோடு அதிக பிக்கப்பையும், மைலேஜையும் கொடுக்க வல்லது. எனவே, இந்த கார் நிச்சயம் வரி விலக்கை என்பதால் ரூ.10 லட்சத்திற்குள் வந்து மார்க்கெட்டை கலக்கும் என்று சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்த புதிய கார் வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








