பிரேசில் ஃபிகோ செடான் மாடலை களமிறக்குமா ஃபோர்டு?

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ கார் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் முகவரியை ஏற்படுத்திக் கொடுத்த ஃபிகோ காரை விரைவில் மேம்படுத்தி அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
பிரேசில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபிகோ ரோகேம் என்ற கார்தான் இந்திய சந்தையில் ஃபிகோவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரேசில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபிகோ ரோகேம் செடான் மாடலை இந்தியாவுக்கு ஃபோர்டு கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஃபிகோவின் செடான் மாடல் வந்தால் விற்பனையில் நிச்சயம் புதிய இடத்தை ஃபோர்டு பிடிக்கும் என்றும் ஆட்டோ வல்லுனர்கள் ஆருடம் கூறுகின்றனர். ஃபியஸ்ட்டா பிளாட்பார்மில்தான் ஃபிகோவும் உருவாக்கப்பட்டது.
எனவே, தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபியஸ்ட்டா கிளாசிக் செடான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் எஞ்சினை பொருத்தி ஃபிகோ செடானை வெளியிட முடியும் என்பதால் விரைவில் ஃபிகோ செடான் வருவதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் புதிதாக 8 கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே ஃபோர்டு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








