சிறு நகரங்களில் விற்பனை மையங்களை திறக்க ஃபோர்டு திட்டம்

Ford Figo
சென்னை: சிறு நகரங்களை குறிவைத்து வர்த்தகத்தை விரிவாக்கும் வகையில் ஃபோர்டு காய்களை நகர்த்தி வருகிறது. டயர்-4 என்று கூறப்படும் கிராமப்புற சந்தையை சார்ந்த சிறு நகரங்களில் புதிய டீலர்களை நியமிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ காரின் விற்பனை ஏறுமுகத்தில் இருப்பதால், அந்த உற்சாகத்தில் ஃபோர்டு, தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 6 புதிய கார் மாடல்களை ஃபோர்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில், சின்ன கார்களும் அடங்கும்.

எனவே, புதிய கார்கள் வருவதற்குள் தனது டீலர் நெட்வொர்க்கை பலப்படுத்தி கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிறு நகரங்களில் புதிய விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் தனது விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 200ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு மார்க்கெட்டிங் இயக்குனர் நிகேல் வார்க் கூறியதாவது:

"நாடு முழுவதும் உள்ள 108 நகரங்களில் தற்போது 189 விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை பெற்றிருக்கிறோம். வர்த்தகத்தை விரிவாக்கும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 புதிய விற்பனை மையங்களை திறக்க இருக்கிறோம்.

மாநகரங்களில் போதுமான அளவு டீலர் நெட்வொர்க்கை பெற்றுள்ளோம். எனவே, தற்போது கிராமப்புற சந்தையில் எங்களது சேவை கிடைக்கும் வகையில் வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ள இருக்கிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 20, 2011, 11:00 [IST]
English summary
Ford desires to expand its network locally, and plans to raise its bar by opening new sales and service centers in the country, taking the count to more than 200 by the end of 2011 and further wish to triple the dealerships by year 2016. As of now Ford is spread across 108 cities in India with 189 sales and service outlets. The Marketing Director of Ford India Mr. Nigel Wark expressed, “We will add 20 touch points more in this year. We are present in all major tier I and tier II cities. We are now focusing on tier IV cities.”
மேலும்... #ford #dealer expansion #automobiles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+