1,00,000 ஃபிகோ கார்கள்!-சென்னை போர்டு தொழிற்சாலையில் கொண்டாட்டம்

Ford Figo
சென்னை: ஒரு லட்சமாவது ஃபிகோ கார் உற்பத்தி செய்யப்பட்டதையடுத்து, சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ கார் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆட்டோமொபைல் விருதுகளை வென்ற ஃபிகோ உற்பத்தியிலும், விற்பனையிலும் பல புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையிலுள்ள தொழிற்சாலையில் ஒரு லட்சமாவது ஃபிகோ கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையை சென்னையிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது.

பாடி அசெம்பிளிங், பெயிண்டிங், டிரிம், சேஸிஸ் மற்றும் இறுதி வடிவமைப்பு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். தொழிற்சாலையின் வாசலில் கட்டியிருந்த ரிப்பனை வெட்டி கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார் ஃபோர்டு இந்தியா தலைவர் மைக்கேல் போனிஹாம்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:

"ஃபிகோ வெற்றிக்கு அயராது பாடுபட்ட தொழிலாளர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். இது நிறுவனத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக கருதுகிறேன். குறுகிய காலத்தில் ஃபிகோ உற்பத்தி ஒரு லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதேபோன்று, ஃபிகோ தொடர்ந்து பல புதிய சாதனைகளை படைக்க தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதே ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் புதிய கார்களின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்," என்றார்.

மைக்கேல் போனிஹாமை தொடர்ந்து விழாவில் பேசிய அனைவரும் தொழிலாளர்களை பற்றி பாஸிட்டிவாக பேசி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

More from DriveSpark

Article Published On: Friday, April 29, 2011, 10:23 [IST]
English summary
Ford rolls-out its ‘100,000th Figo’ at the Chennai Plant. Michael Boneham, the President and Managing Director of Ford India also joined the celebrations with the management at the Body Shop by cutting a ceremonial ribbon and commenced the festivities with the historic occasion.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+