சக்கரங்களில் கோளாறு: 1.28 லட்சம் கார்களை திரும்ப பெறும் ஃபோர்டு

இதுகுறித்து அந்நாட்டு தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஃபோர்டு ஃப்யூசன் மற்றும் மெர்குரி மிலன் மாடல் கார்களில் சக்கரங்கள் சரியாக பொருந்தாததால், திடீரென்று கழன்று விபத்து ஏற்படும் ஆபத்து இருந்தது.
இதுகுறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்த பின் பிரச்னை இருப்பதாக கருதப்படும் கார்களை ஃபோர்டு திரும்ப பெற தீர்மானித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் ஏப்ரல் 30ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களும், அதே ஆண்டு டிசம்பர் 1ந் தேதி முதல் 2010ம் ஆண்டு நவம்பர் 13ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட 17 இஞ்ச் ஸ்டீல் வீல்கள் கொண்ட கார்கள் திரும்ப பெற உள்ளன.
மொத்தமாக 1.28 லட்சம் கார்களை ஃபோர்டு திரும்ப பெற உள்ளன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








