டிரைவரின் இதயத்துடிப்பை கண்டறியும் ஸ்பெஷல் கார் இருக்கை:ஃபோர்டு தயாரிக்கிறது

கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் விதத்தில் 'மைசிங்க்' என்ற மருத்துவ வசதிகளை டிரைவருக்கு ஏற்படுத்தி தருவதற்கான முயற்சிகளை ஃபோர்டு மேற்கொண்டுள்ளது. இதன் முதல்படியாக, டிரைவர்களின் இதயத்துடிப்பை கண்டறிந்து தெரிவிக்கும் புதிய கார் இருக்கையை ஃபோர்டு தயாரித்து வருகிறது.
இசிஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஸ்பெஷல் கார் இருக்கையில், தேவையான இடங்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். டிரைவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் அவரது இதயத்துடிப்பின் அளவை கண்டறிந்து டேஷ்போர்டில் இருக்கும் சிறிய மானிட்டரில் தெரிவிக்கும்.
மேலும், மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்னைகள் குறித்து இந்த ஸ்பெஷல் இருக்கை மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். டிரைவிங்கின்போது இதயத்துடிப்பு சீராக இல்லையென்றால், உடனடியாக டிரைவரை எச்சரிக்கும். இது டிரைவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.
மைசிங்க் மருத்துவ வசதியில் நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி தொடர்பான பிரச்னைகளையும் தெரிந்துகொள்ளும் வசதிகளை இந்த ஸ்பெஷல் கார் இருக்கை மூலம் தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளை அடுத்தடு்த்து மேற்கொள்ள இருப்பதாகவும் ஃபோர்டு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








