ஸ்பெஷல் எடிசன் என்டெவர் எஸ்யூவி: ஃபோர்டு அறிமுகம்

பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஸ்பெஷல் எடிசன் என்டெவர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோர்டு.

இந்தியாவின் பிரிமியம் எஸ்யூவி மாடல்களில் ஃபோர்டு என்டீவருக்கு எப்போதுமே தனி மரியாதை இருக்கிறது. பிரபல கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்களின் உள்ளிட்ட பலரது இல்லங்களை ஃபோர்டு என்டெவர் அலங்கரித்து வருகிறது.

மேலும், பிரிமியம் எஸ்யூவி வாங்க திட்டமிடுபவர்களின் பட்டியலில் என்டீவரும் இடம்பெற்றுவிடுகிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதத்தில் கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் என்டெவர் எஸ்யூவியை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது.

ஆல்வீல் டிரைவ் கொண்டஎன்டீவர் டாப் வேரியண்ட் மாடலில் மட்டும் ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும். இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் என்டீவருக்கு ஹூரிக்கேன் என்று ஃபோர்டு பெயரிட்டுள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆல் வீல் டிரைவ் கொண்ட டாப் வேரியண்ட் மாடலைவிட ஸ்பெஷல் எடிசன் ரூ.40,000 கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூரிக்கேன் முன்பக்கம் கம்பீரமான தோற்றத்தை தரும் வகையில் புதிய வடிவமைப்புடன் கூடிய கிரில் பொருத்தப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் கிராபிக்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளதாஸ் பார்த்தவுடன் பட்டென்று இது ஸ்பெஷல் எடிசன் என்று கூறிவிட முடிகிறது.

காரின் நீளத்தை உணர்ந்து பார்க்கிங் செய்ய வசதியாக பின்புறத்தில் ஒரு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், குரோம் பூச்சுடன் கூடிய சைலென்சர் கண்ணை கவர்கிறது. சாதாரண என்டவரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே காமன் ரயில் டர்போ டீசல் எஞ்சின்தான் இதிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இது 156 பிஎச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக ஹூரிக்கேன் வந்துள்ளது. இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 19, 2011, 15:35 [IST]
English summary
The Ford Endeavour is India's first premium SUV in many ways. It is the car that offered acres of space and comfort along with brute force. The charm of the Endeavour was slightly dented after the arrival of other premium SUVs such as the Toyota Fortuner and the Chevrolet Captiva. Ford India has now made an effort to boost the Endeavour's image with a new limited edition variant called the Hurricane. The Ford Endeavour Hurricane is priced at Rs.22.13 lakhs (ex-showroom price, Delhi)and offers a long list of features. The Hurricane will be the top end variant of the Endeavour and is Rs.40,000 more expensive the four wheel drive model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+