சலுகைகளுடன் நடுராத்திரி கார் விற்பனையை நாளை துவங்குகிறது ஃபோர்டு

Ford Fiesta
விற்பனையை அதிகரிக்கும் வகையில் நள்ளிரவு 12 மணி வரை கார் விற்பனை செய்யும் புதிய முறையை ஃபோர்டு நாளை துவங்குகிறது. இந்த புதிய திட்டத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் சலுகைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு கடைசி நெருங்குவதால் கார் விற்பனை வழக்கமாக மந்தமாக இருக்கும். எனவே, கார் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களும் சலுகை திட்டங்களை அறிவிப்பது வழக்கம்.

இதேபோன்று ஒரு புதுமையான சலுகைகளுடன் கூடிய புதிய விற்பனை நடைமுறையை ஃபோர்டு அறிமுகப்படுத்துகிறுது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஃபோர்டு கார் ஷோரூம்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்கும். மேலும், நாளை முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் நடுராத்திரி கார் விற்பனை திட்டத்தின்படி கூப்பன்கள் கொடுக்கப்பட உள்ளது.

இந்த கூப்பன்கள் மூலம் ஏற்கனவே உள்ள சலுகைகளை விடவும் கூடுதல் சலுகைகளை பெற முடியும். எல்இடி டிவி, பிளாக்பெர்ரி போன்கள், டிஜிட்டல் கேமரா மற்றும் டிவிடி பிளேயர்களை இந்த திட்டத்தில் மூலம் வெல்ல முடியும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

மேலும், கார் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் குடும்பத்தினர் ஃபோர்டு ஷோரூம்களில் நடைபெறும் மாஜிக் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி நிச்சயம் கார் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 3, 2011, 10:51 [IST]
English summary
American Car maker Ford to start mid night car sales scheme tomorrow. The all the ford show rooms will be opened 8 am to mid night 12. The buyers can avail attractive offers from the mid night sale offer period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+